7 கால்நடைகள் பெரியம்மையால் உயிரிழப்பு

7 கால்நடைகள் பெரியம்மையால் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் – மருதங்கேணி பகுதியில் பெரியம்மை நோய் காரணமாக 7 இற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன, 15 கால்நடைகள் பெரியம்மை நோயுடன் இனங்காணப்பட்டுள்ளன.

இலங்கை அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்க பொருளாளரும் மருதங்கேணி கால்நடை வைத்தியருமான எஸ்.சுகிர்தன் கால்நடைகளுக்கு, தோல்ப் பகுதியில் கொப்புளங்கள் ஏற்படல், கால்கள் வீங்குதல், பசியின்மை, காய்ச்சல் முதலான அறிகுறிகள் ஏற்படும் எனவும், நோய்த் தொற்றுக்கு உள்ளான கால்நடைகளை தனிமைப்படுத்துவதன் மூலம் இந்த நோய்ப் பரவலைத் தடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்