சுகாதார ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்
சுகாதார ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், சுகாதார நிபுணர்கள் சங்கம் உள்ளிட்ட சுகாதார சேவையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து இன்று புதன் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
இன்று புதன் காலை 6.30 முதல் நாளை வியாழன் காலை 6.30 வரையான அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இரத்து செய்யப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்கள் மற்றும் தாதியர் தொழிற்சங்கங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதாரத் தொழிற்சங்கங்களும் இன்றைய தினம் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்