பரீட்சைகள் திணைக்களம் சற்றுமுன்னர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 3,269 நிலையங்களில் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மதியம் 12.10 மணி வரை பரீட்சை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகளையும் தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்ய முடியாது எனவும், அதற்கான பணிகளை பாடசாலைகளே மேற்கொள்ள வேண்டும் எனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்களின் பெயர், ஊடகம், தேசிய அடையாள அட்டை எண் பெண்/ஆண் ஆகிய திருத்தங்களை அதிபர்களின் ஆதரவுடன் குறித்த இணையதளம் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், உரிய திருத்தங்கள் எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவு நிறைவடையும் எனவும், மீளாய்வு திகதிகள் மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனவும் பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்