
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இக்கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் உள்ளூராட்சி சபைத் தேர்தல், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கட்சி என்ற வகையில் எவ்வாறு ஆதரவளிப்பது, பொதுஜன பெரமுனவின் எதிர்காலப் பாதை என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
