நாளை வடக்கு கிழக்கில் சுகாதாரத்துறையினர் வேலை நிறுத்தம்
நாளை வடக்கு கிழக்கில் சுகாதாரத்துறையினர் வேலை நிறுத்தம்
நாடளாவிய ரீதியில் ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கங்கள் பாரிய வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை நாளை புதன் கிழமை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
வடக்கு கிழக்கில் உள்ள ஸ்ரீ லங்கா சுகாதார சேவைச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து நாளை புதன் கிழமை சுகயீன விடுமுறைப் போராட்டம் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
இலங்கை வைத்தியசாலைகளில் சேவையாற்றும் வைத்தியர்கள் முதல் சிற்றூழியர்கள் வரையான 75 சேவைப் பிரிவுகளும் இணைந்து மேற்கொள்வதாகவும், போராட்டத்தின் போது அவசர சிகிச்சைகளை மாத்திரம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்