நகர மண்டப பகுதியில் பாரிய வாகன நெரிசல்
கொழும்பு நகர மண்டப பகுதியில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்பாட்டம் காரணமாக பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்பாட்டம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் இவ் ஆர்பாட்டத்திற்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ள போதிலும் ஆர்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெறுகின்றது.
இதற்கமைய புஞ்சிபொரளை முதல் குலரத்ன மாவத்தை வரையிலான பகுதி, டீன்ஸ் வீதிஇ தொழிநுட்ப கல்லூரி சந்தி முதல் சங்கராஜ மாவத்தை வரையிலான பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் பேரணியாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்