கொழும்பு கொட்டாங்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு கொட்டாங்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு
கொழும்பு கொட்டாங்சேனை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நபர் ஒருவர் மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் எனினும் இச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் வழக்கு விசாரணை ஒன்றிற்காக சென்றுகொண்டிருந்த போதே இச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமைக்கான காரணமோ வேறு விபரமோ அறியப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருவதாகவும் கொட்டாஞ்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்