இந்த மாதத்தில் IMF உதவி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாதத்தின் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் டொலர் நிதி கிடைக்கப்பெறும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் கடன்மறுசீரமைக்கான எழுத்துமூல உத்தரவாதம் நேற்றிரவு தமக்கு கிடைக்கப்பெற்றதாகவும், இந்தியா 10 வருடத்திற்கான கடன் ரத்தையும் 15 வருடங்களுக்கான கடன் மறுசீரமைப்பு உறுதி மொழியையும் கடிதம் மூலம் உறுதிப்படுத்தி, அது தொடர்பில், மத்திய வங்கியின் ஆளுநருடன் கலந்துரையாடி அதனை சர்வதேச நாணய நிதியத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் போது கடன் ரத்து மற்றும் கடன் மறுசீரமைப்பு காலம் குறித்து ஜனாதிபதி தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

மேலும் இது பற்றி தெலிவிக்கையில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறுவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீர்மானிக்கப்பட்டதாகவும், அனைத்து இரு தரப்பு கடன் வழங்குநர்களும் நிதியியல் உறுதிபாடுகளை வழங்கியுள்ளனர் என்றும், இதற்கமைய, இந்த மாதத்தின் 3 அல்லது 4 ஆவது வாரத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்க பெறும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

நாடு பெற்றுக்கொண்ட இருதரப்பு கடன்கள் தற்போது செலுத்தப்படுவதில்லை. பலதரப்பு மற்றும் வணிகக்கடன்கள் மாத்திரமே மீள செலுத்தப்படுகின்றன.

இதேவேளைஇ சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் முறியுமாயின்இ வெளிநாடு மற்றும் தனியார் வங்கிகளில் பெற்றுக் கொண’ட கடனை செலுத்த வேண்டி ஏற்படும்.

அத்தோடு கடந்த 7 முதல் 8 மாதங்களுக்கு முன்னர் எதிர்கொண்ட நிலைமையை விட கடினமானதாக அமையும்.வரிச்சுமை அதிகரித்துள்ளதாக தொழில் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். எனினும்இ குறுகிய காலத்துக்கு இதனை தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த நிலைமையைஇ மக்களும்இ தொழிற்சங்கங்களும் புரிந்துகொள்ள வேண்டும்.இதனை புறக்கணித்தால் தற்போதையதை விட நிலைமை மிகவும் மோசமாகும்.

கருத்து சுதந்திரத்துக்கு மதிப்பளிப்பதுடன் அமைதியான ஆர்ப்பாட்டங்களும் இடமளிக்கப்படும்.

அதனை விடுத்துஇ ஆர்ப்பாட்டங்கள் பேரணிகள் மூலம் இந்த நடவடிக்கையை குழப்ப நினைப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உரையின் போது எச்சரித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்