வவுனியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமிகள் உட்பட நால்வர் சடலமாக மீட்பு
வவுனியாவில் இரு சிறுமிகள் உட்பட நான்கு பேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் வீட்டில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கும் விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரண்டு சிறுமிகளின் உடல்கள் நாற்காலியில் இருந்தும்; தாயின் உடல் படுக்கையில் இருந்தும் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது-41), மரதனஞ்சி (வயது-36) மைத்ரா (வயது-09) மற்றும் கேசரா (வயது-03) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட மாஜிஸ்திரேட் விசாரணை இன்று பிற்பகலில் நடைபெறவுள்ளது.
வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்