கடன்மறுசீரமைப்புக்கான எழுத்து மூல ஆதரவை சீனா!
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி எழுத்து மூலமான ஆதரவை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. இதன்படி, இந்த எழுத்துமூல ஆதரவு சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைக்கு மிக நெருக்கமானதாகவும்இ அதன் 2.9 பில்லியன் டொலர் விரிவாக்கப்பட்ட நிதியை பெறுவதற்கு சாதகமான சூழ்நிலை எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த எழுத்துப்பூர்வ ஆதரவின் மூலம் உரிய உத்தரவாதத்தைப் பெறுவதில் இருந்த மிகப் பெரிய தடை ஒன்று நீக்கப்படுவதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்