பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்
பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்
வீரக்கெட்டியவில் பிரதேசவாசிகள் குழுவிற்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் 2 பொதுமக்கள் காயமடைந்து தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
வீரகெட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோனதெனிய பிரதேசத்தில் கசிப்பு சுற்றிவளைப்பிற்கு சென்று திரும்பும் போது அத்தனயாய பிரதேசத்தில் வீதியில் நின்ற பலரை வீரக்கெட்டிய பொலிஸ் அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.இதன்போது இரு இளைஞர்களுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் பின்னர் அது மோதலாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மோதலின் போது காதுகள் கடிக்கப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த மோதலில் காயமடைந்த 2 பொதுமக்களும் 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் தங்காலை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்