தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானமிக்க கலந்துரையாடல்கள்

தேர்தல்கள் ஆணைக்குழு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம், தேர்தலுக்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக மீண்டும் கூடுகின்றது.

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணியவில் இந்த கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கிடையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது

முன்னதாக தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றது. எனினும் அன்றைய தினம் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை . 

இதேவேளை, இன்றைய தினம் எதிர்க்கட்சிகளில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளும் இன்று தேர்தல் ஆணைக்குழுவினரை சந்திக்கவுள்ளன.

முன்னதாக, தேர்தல் ஆணைக்குழுவுக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக அனுப்பிய கடிதத்தில், எதிர்வரும் 20 திகதிக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்