அரசர்கத்தின் புதிய திட்டம் – சமுர்தி உள்ளிட்ட நலன்புரி கொடுப்பனவுகள் குறைப்பு
அரசாங்கம் சமுர்த்தி உள்ளிட்ட ஏனைய நலன்புரி கொடுப்பனவுகளை நூற்றுக்கு 75 வீதம் குறைப்பதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பி ஏ பி பஸ்நாயக்க கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
சமூக நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்து அரசாங்கம் கொடுப்பனவினை குறைப்பதற்கு தயாராகி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்