பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் கோர விபத்து 13 பேர் பலி

பேருந்து ஒன்று முச்சக்கர வண்டியுடன் கோர விபத்து 13 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பெருவின் பியூரா பகுதியில் இருந்து அதன் தலைநகரான லிமாவுக்கு சென்ற பேருந்து ஒன்று கோர விபத்தில் சிக்கியுள்ளது.

குறித்த இந்த பேருந்தில் சுமார் 50 பேர் பயணித்துள்ளனர். அன்காஷ் என்ற இடத்துக்கு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த முச்சக்கர வண்டி நேருக்கு நேர் மோதியதில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் பேருந்தும், முச்சக்கரவண்டியும் தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

பொலிஸார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயம் அடைந்த 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்

இந்த விபத்து தொடர்பாக பொலிஸார் பேருந்து சாரதியை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்