இரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் வழமைக்கு
இரத்து செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் வழமைக்கு
இயந்திர சாரதிகளுக்கான வெற்றிடம் காரணமாக வார இறுதியில் பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் அலுவலக ரயில் சேவையை வழமை போன்று இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சாரதிகள் இன்மையால் நேற்றைய தினமும் 24 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.
அவ்வாறு இரத்து செய்யப்பட்ட ரயில்களில் கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி செல்லும் உதய தேவி ரயில் அடங்குகிறது.
எனினும் குறித்த ரயில்லை நாளை முதல் சேவையில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ரயில் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் அமுலாகும் வகையில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக திருத்தப்பட்டது.
இதனையடுத்து தொடருந்து இயந்திர சாரதிகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டதுடன் அவர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சரின் தலைமையில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்