தளபாட வர்த்தக நிலையத்தில் தீப்பரவல்

தளபாட வர்த்தக நிலையத்தில் தீப்பரவல்

கொட்டகலையில் பிரதேசத்தில் உள்ள தளபாட வர்த்தக நிலையத்தில் நேற்றிரவு ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகபேச்சாளர் அலுவலகம் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் பிரதேசவாசிகள், நுவரெலிய தீயணைப்பு பிரிவு, இராணுவத்தினர், மற்றும் திம்புள – பத்தனை காவல்துறையினர் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது குறித்த வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளது எனினும்  உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை என அறிவிக்கப்படுகின்றது.

இந் நிலையில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்