மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளனத்தின் ஆண்டு விழா
-கல்முனை நிருபர்-
மாவடிப்பள்ளி அனைத்து பாலர் பாடசாலைகள் சம்மேளன மாணவர்களின் வருடாந்த கலை நிகழ்ச்சியும், பரிசளிப்பும் சம்மேளன தலைவர் எம்.எச்.எம். அஸ்வர் தலைமையில் மாவடிப்பள்ளி கமு/கமு/அல்-அஸ்ரப் மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவடிப்பள்ளி அல்-மதீனா பாலர் பாடசாலை, றோயல் பாலர் பாடசாலை, அல் ரஹ்மானியா பாலர் பாடசாலை, அந் நூர் பாலர் பாடசாலை ஆகியவற்றின் ஒன்றிணைவான இந்த சம்மேளன வருடாந்த கலை நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழாவுக்கு பிரதம அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் மற்றும் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ் ஜெகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கௌரவ அதிதியாக கல்முனை கல்வி வலய உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்வி அதிகாரியுமான திருமதி ஏ.பி. பாத்திமா நஸ்மியா சனூஸ் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.என்.எம். ரணீஸ், அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் நூருல் ஹுதா உமர், மாவடிப்பள்ளி மேற்கு கிராம நிலதாரி ஐ.ஹஸீனா பானு, சாய்ந்தமருது ஆஸிப் காட்சியறை முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.எச்.ஜிப்ரி, சம்மாந்துறை வை.என். ரவல்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எஸ். யாஸ்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் ஐந்து மொழியிலான கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதை தொடர்ந்து, மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள், நினைவு சின்னங்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்