Last updated on April 11th, 2023 at 07:30 pm

இலங்கைக்கான பிரித்தானியா உயர்ஸ்தானிகர் - கிழக்கு ஆளுனர் சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானியா உயர்ஸ்தானிகர் – கிழக்கு ஆளுனர் சந்திப்பு

-கிண்ணியா நிருபர்-

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை மாலை திருகோணமலை Uga Jungle Beach விடுதியில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் தெற்காசிய பிராந்திய அலுவலகம் மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளர் மாயா சிவஞானம்  கலந்துகொண்டார்.

இரு நாடுகளின் வர்த்தகம் மற்றும் பொருளாதார விவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு குறித்தும இதன் போது கலந்துரையாடப்பட்டது.

அதுமட்டுமின்றி இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகளை வழங்கும் முறை குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அதற்காக விசேட குழுவொன்றை நியமித்து தீர்வுகளை வழங்கியுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

சமூக அநீதிகள் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையின் பிரகாரம் ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் சென்று தீர்வுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்