புதிய சிறார்களை வரவேற்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

 

திருகோணமலை கலைவாணி முன்பள்ளியின் 2023 ம் ஆண்டின் புதிய சிறார்களை வரவேற்க்கும் நிகழ்வு கடந்த வெள்ளி கிழமை முன்பள்ளியின் வளாகத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வலயக்கல்விஅலுவலகத்தின் உதவி கல்வி பணிப்பாளர் சி .தவநாதன், கௌரவ விருந்தினராக அரசடி பிரிவை சேர்ந்த கிராம உத்தியோகத்தர் ரூமி மற்றும் சிறப்பு விருந்தினராக பட்டணமும் சூழலும் பிரதேசத்தின் ஆரம்பப் பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி அமுதியா கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் சிறார்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.