
ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை – மொரவெவ – குணவர்தனபுர பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருகோணமலை நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபரொருவரை தேடிச் சென்ற போது, 05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த கயான் மதுசங்க (32 வயது) என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும், குறித்த நபர் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
