பூனைகளை வளர்ப்போருக்கு எச்சரிக்கை மனிதர்களைத் தாக்கும் அபூர்வ நோய்
பூனைகளை வளர்ப்போருக்கு எச்சரிக்கை மனிதர்களைத் தாக்கும் அபூர்வ நோய்
பிரித்தானியாவில் முதன்முறையாக கடுமையான வலியுடன் கூடிய கொப்புளங்களை உருவாக்கும் நோய் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூனைகள் மூலம் அபூர்வ நோய் ஒன்று பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதேவேளை இதற்குமுன், தென் அமெரிக்காவுக்கு வெளியே வேறெங்கும் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டதில்லை. இந்நிலையில் பிரித்தானியாவில் மூன்று பேருக்கு பூனையிடமிருந்து பரவும் இந்த பூஞ்சை நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்போரோட்ரிகோசிஸ் பிரேசிலியென்சிஸ்
என்று அழைக்கப்படும் இந்த பூஞ்சைத் தொற்று உடலின்மீது கொப்புளங்களையும் புண்களையும் உருவாக்கும். பூனையின் உடலில் உருவாகும் இந்த நோய், பாதிக்கப்பட்ட பூனையின் கீறல், அல்லது பூனைக்கடி மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடியதாகும்.
அதேவேளை பிரேசில் நாட்டில் இந்த கிருமி அதிகம் காணப்படும் நிலையில், பிரேசிலிலிருந்து பிரித்தானியாவுக்குக் கொண்டு வரப்பட்ட பூனை ஒன்றை வைத்திருக்கும் 64 வயது பெண் ஒருவர், அவரது மகளான 30 வயது பெண் ஒருவர் மற்றும் 20 வயதுகளிலிருக்கும் கால்நடை மருத்துவர் ஒருவர் ஆகிய மூவருக்கு இந்த நோய் பரவியுள்ளது.
ஒரே ஒரு பூனையிடமிருந்து இந்த நோய் அந்த மூவருக்கும் பரவியுள்ளது. இந்த பூஞ்சைத் தொற்று பொதுவாக மிதமானதாக காணப்பட்டாலும், எலும்புகளையும் மூட்டுகளையும் கூட பாதிக்கலாம் என்றும், சிலருக்கு நுரையீரல்கள் மற்றும் மைய நரம்பு மண்டலமும் பாதிக்க கூடிய அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்