பத்து ஆண்டுகளில் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்

-யாழ் நிருபர்-

பத்து ஆண்டுகளில் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்

இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட 50 பாடசாலைகள் மூட வேண்டி வரும் என கணிப்பு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

உரும்பிராய் ஞானவைரவர் சமூக அறக்கட்டளை சார்பில் உரும்பிராய் பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை உரும்பிராயில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார்.

பூங்குடி தீவு, வேலணை மற்றும் அனலைதீவு போன்ற பகுதிகளில் பாடசாலைகளானது மூடப்பட்டு வருகின்றது.

மேலும் அற சிந்தனையுடன் ஆரம்பிக்கப்படுகின்ற இவ் அறக்கட்டளை முதலாவது கட்டத்தில் 50 லட்சத்துக்கு மேல் பணி செய்து உள்ளீர்கள்.

அடுத்த கட்டங்களில் இப்பகுதிகளில் மூடப்படும் நிலையில் உள்ள பாடசாலைகளை மூடாமல் செய்ய என்ன வழி? அத்துடன் மருத்துவ உதவி, சமூகத்திற்கான அவசியதேவைக்குரிய உதவி என அனைத்தையும் பகுதி பகுதிகளாக பிரித்து வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு எதை செய்ய விருப்பம் அவர்கள் அதை அபிவிருத்தி செய்யலாம் என்றும்,

யாழ்ப்பாணத்தில் இருந்த அறக்கட்டளைகள் பல பேணுவாரற்று கைவிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.

23 வருடங்களாக சிவபூமி அறக்கட்டளை, இரண்டு பாடசாலை, இரண்டு முதியோர் இல்லம் மற்றும் ஆசிரமங்கள் ஐந்து போன்றவற்றை நடத்தி வருகின்றோம். புலம்பெயர் சமூகமானது இவ்வாறான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

உரும்பிராய் இந்து கல்லூரியை பாதுகாக்க வேண்டும்.

ஏனெனில் அது வரலாறு படைத்த பாடசாலை. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடாதிபதியாக இருந்த பேராசிரியர் கணேசலிங்கம். இறப்பதற்கு முன் அதனை எவ்வாறு ஆயினும் காப்பாற்ற வேண்டும் என என்னிடம் கூறி கவலை அடைந்தார்.

இஸ்லாமியர்களின் அறக்கட்டளையே இன்று இலங்கையில் உச்சகட்டத்தில் உள்ளது. அவர்கள் தமக்கென்று ஒரு பல்கலைக்கழகத்தையே தென்கிழக்கு பல்கலைக்கழககமாக நிறுவி, வைத்தியசாலைகள் நிறுவி மற்றும் இன்னொரு பல்கலைக்கழகத்தினை இஸ்லாமியர்கள் கிழக்கு இலங்கையில் அமைத்து அதை அரசாங்கத்திடம் பிரச்சனையாக உள்ளது.

வரும் 24ம் தேதி சிவபூமி அற கட்டளை கிழக்கு இலங்கையில் கொக்கட்டி சோலையில் பல கோடி ரூபாய் செலவில் திருமந்திர அரண்மனை கட்டி திறக்க உள்ளோம்.

3000 பாடல்களும் சிவபூமி விளையாட்டு மைதானத்தில் அடுக்கப்பட்டுள்ளது. ஒரு எழுத்துப் பிழை ஏற்பட்டால் ஒரு கல்லினை மாற்ற வேண்டும். அவ்வாறாக 16 கல்லு மாற்றப்பட்டுள்ளது. அவ்வளவு கஷ்டப்பட்டு கிழக்கு இலங்கையில் திறந்து வைக்கப்பட உள்ளது – என்றார்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்