தேசத்தின் வளர்ச்சிக்கு நாணய நிதியத்தின் பிணை எடுப்பு போதுமானதாக இல்லை

தேசத்தின் வளர்ச்சிக்கு நாணய நிதியத்தின் பிணை எடுப்பு போதுமானதாக இல்லை

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இலங்கைக்கு தற்போது அவசியமானதாக இருந்தாலும், உண்மையில் அது தேசத்தின் வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது என்று தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இதற்கான பதிவை அவர் இட்டுள்ளார்.

இலங்கையின் வளர்ச்சியை உருவாக்குவதே தற்போதைய சவாலாகும்.

எனினும், அத்தியாவசிய தேவைகள் மோசமடைந்து வரும் நிலையில், இழக்கப்படும் தொழில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

எனவே தேவையான வளர்ச்சியை உருவாக்க, உள்நாட்டில் இயங்கும் வர்த்தகம் அல்லாத வளர்ச்சி இனி போதுமானதாக இருக்காது.

இதற்காக ‘சுவர்களை தகர்த்து உலகிற்கு பாலங்கள் கட்டப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தநிலையில் சீர்திருத்தங்கள் இல்லாமல் உள்நாட்டு தீர்வு உள்ளது என்று மேடைகளில் கூறுவது சாத்தியமற்ற அம்சமாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்