இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று ஞாயிறு அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில். 50 மில்லிமீட்டருக்கும் அதிகமாக பலத்த மழை பெய்யலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனிடையே, வடமத்திய மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்