கவனயீர்ப்பு போராட்டம் -நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை ஊழியர்கள்!

நுவரெலியா மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை பொது வைத்தியசாலையின். வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் ஆகியோர் இணைந்துm வைத்தியசாலை பிரதான நுழைவாயில் முன்பாக இன்று சனிக்கிழமை காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மக்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதிகரித்த வட்டி வீதத்தினை குறைத்தல் மற்றும் ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அனைத்து சேவைகளையும் இடைநிறுத்தி பாரியளவில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

இந்தப் போராட்டம் காரணமாக வைத்தியசாலை பணிகளுக்கு சுமார் ஒரு மணிநேரம் பாதிப்பு ஏற்பட்டமையால், நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

.