சிறார்கள் மத்தியில் போதைப்பொருள்

சிறார்கள் மத்தியில் போதைப்பொருள்

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி. திஸாநாயக்க பெருந்தோட்ட சிறார்களை வேலைக்கு அமர்த்துவதை தடுப்பதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிக கவனம் செலுத்துமாறும், சிறார்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுப்பது சம்பந்தமாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நேற்று (03 ஆம் திகதி) வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட போதே, எஸ்.பி. திஸாநாயக்க இதனை தெரிவித்தார்.

சந்தையில் ஒரு வகையான பாக்கு சிறார்களை இலக்கு வைத்து இருப்பதாகவும், அது போதைப்பொருளாக குறிப்பிடப்படாவிட்டாலும், சிறார்கள் போதைப்பொருள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க கூடியது என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறும்,  இதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை இதுவரை 43 பாடசாலைகளில் நுவரெலியா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட, தொ.காவின் தவிசாளரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உட்பட அதிகாரிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்