
லயன் குடியிருப்பில் தீ விபத்து
-பதுளை நிருபர்-
ஹப்புத்தளை பிடரத்மலை லயன் குடியிருப்பில் தீ விபத்து.
ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிடரத்மலை மேல் பிரிவின் லயன் குடியிருப்பில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மின் கசிவினால் வீடொன்று முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. இவ்வனர்த்தத்தினால் வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களும் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
