விரைவில் தேர்தல் தொடர்பில் தீர்மானம்
விரைவில் தேர்தல் தொடர்பில் தீர்மானம்
தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் அடுத்த வாரம் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடி தீர்மானிக்கப்படும் என அறிவித்துள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் தேர்தலுக்கான நிதி, வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் மற்றும் தேர்தல் நடத்தப்படும் தினம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் 7ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆணைக்குழுவுக்கு வருகை தருமாறு நிதியமைச்சின் செயலாளர், அரச அச்சகமா அதிபர், பொலிஸ்துறை மா அதிபர் உள்ளிட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
நேற்றைய தினம் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படாத நிலையில், அடுத்த வாரம் மீண்டும் கூடி நிதியமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்து எதிர்வரும் 9ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்