யாழ்.தொழில்நுட்ப கல்வியியற்கல்லூரியின் புதிய பணிப்பாளராக கே.சாந்தகுமார் நியமனம்

யாழ்.தொழில்நுட்ப கல்வியியற்கல்லூரியின் புதிய பணிப்பாளராக கே.சாந்தகுமார் இன்று வெள்ளிக்கிழமை தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் யாழ் கந்தரோடையை பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்டவர். BBA, MPA, PGDP பட்டங்களை பெற்றுள்ள இவர் யாழ்.தொழில்நுட்ப கல்வியியற்கல்லூரியில் ஏற்கனவே உதவிப்பணிப்பாளராக பதவி வகித்தார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு பணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர் தொழில்நுட்பக்கல்வி பயிற்சி திணைக்களத்தில் 25 வருட அனுபவம் மிக்கவராவார்.