கச்சதீவை நோக்கி படையெடுக்கும் மக்கள்
-யாழ் நிருபர்-
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சத்தீவு அந்தோணியார் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலய வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் குறிகாட்டுவான் இறங்கு துறையிலிருந்து படகுகள் மூலம் கச்சத்தீவு நோக்கிப் பயணமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்