சந்திரமுகி 2 படத்தில் கங்கனாவின் லுக்!
சந்திரமுகி 2 படத்தின் மேக்கப் ரூமில் எடுத்த படங்களை கங்கனா ரனாவத்இ தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
தாம்தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரனாவத். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவியில் ஜெயலலிதாவாக நடித்திருந்தார். தற்போது சந்திரமுகி 2 படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தின் மேக்கப் ரூமில் எடுத்த படங்களை கங்கனா ரனாவத்இ தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஆனால் மேக்கப் ரூமில்எடுக்கப்பட்ட படங்களில் அவரின் முகம் மறைக்கப்பட்டுள்ளது. தலைக்கு மேல் செய்யப்பட்டுள்ள அலங்காரம் மட்டுமே தெரிகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்