ஜனாதிபதிக்கு தங்க நெற்கதிரை வழங்கிய விவசாயிகள்
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் விவசாயிகளுக்குத் தேவையான உரங்களை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு, பொலன்னறுவை விவசாயிகள் தமது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை – மின்னேரியா பிரதேசத்தில் நேற்று வியாழன் நடைபெற்ற வைபவத்தில் பங்கு கொண்ட ஜனாதிபதிக்கு பொலன்னறுவை மாவட்ட விவசாய அமைப்பின் தலைவர் ஆனந்த ராஜபக்ஷ உள்ளிட்ட விவசாயிகள் தமது சங்கத்தின் சார்பில் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்காக ஆற்றிய பணியைப் பாராட்டி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு “ரன் வீ கரல” (தங்க நெற்கதிர்) என்ற பெயர் பொறிக்கப்பட்ட பரிசும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்