மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது
எஹலியகொட பிரதேசத்தில் 10 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 46 வயதுடைய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எஹலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளானதாக கூறப்படும் அந்த சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்