நீரில் மூழ்கி குடும்பஸ்தர் பலி
-கிளிநொச்சி நிருபர்-
கிளிநொச்சி கிளாலி பகுதியில் இன்று புதன்கிழமை நண்பகல் நீரில் மூழ்கி குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி தாமரைக்குளத்தில் இருந்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் கிளாலி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மரியான் பீரிஸ் (வயது-52) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்