2023ன் பிளாக்பஸ்டர் படங்களை லிஸ்ட் செய்த விமர்சகர்!
படம் வெளியான 25-வது நாளில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான போதும் வசூலில் எந்த குறையும் இல்லாமல் உலகம் முழுவதும் 330 கோடி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழில் இந்த வருடத்தின் முதல் பிளாக்பஸ்டர் படமாக துணிவு படத்தை குறிப்பிட்டுள்ளார். சினிமா விமர்சகர் ரமேஷ் பாலா. அவர் ஹாலிவுட், டோலிவுட், மோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழிகளிலும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்த படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் இந்தியில் அதாவது, பாலிவுட்டில் பதான்
H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ம் திகதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது ‘துணிவு’ திரைப்படம்.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன், பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், சிபி சக்ரவத்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாமானியர்கள் மீதான வங்கிகளின் அத்துமீறல்களை மையமாக கொண்டு உருவான இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
போனிகபூர் தயாரித்திருந்த துணிவு படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார்.
படம் வெளியான 25-வது நாளில் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான போதும் வசூலில் எந்த குறையும் இல்லாமல் உலகம் முழுவதும் 330 கோடி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழில் இந்த வருடத்தின் முதல் பிளாக்பஸ்டர் படம் துணிவு என்கிறார்கள் ரசிகர்கள். துணிவும் வாரிசும் ஒரே நாளில் வெளியானாலும், அஜித்தின் துணிவு நள்ளிரவு 1 மணிக்கும், விஜய்யின் வாரிசு அதிகாலை 4 மணிக்கும் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.