திருகோணமலையில் தேசிய நீர் வழங்கல் சபை ஊழியர்கள் போராட்டம்
-கிண்ணியா நிருபர்-
நாடு தளுவிய ரீதியில் இன்று புதன்கிழமை பல தொழிற் சங்கங்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து பதாகைகளை ஏந்தியவாறும் கறுப்பு பட்டி அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை பிராந்திய காரியாலய உத்தியோகத்தர்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கருப்பு பட்டி அணிந்து கண்டி திருகோணமலை பிரதான வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின்சார கட்டண அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரிப்பு, நீர்வழங்கல் சபையை தனியார் மயமாக்குதல், மருத்துவ கொடுப்பனவு நிறுத்தப்பட்டமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நீர் வழங்கல் சபையின் பொறியியலாளர்கள், சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்