திருகோணமலை : மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை அலஸ்தோட்டம் மாதுமை அம்மாள் வித்தியாலயம், அன்புவழிபுரம் கலைமகள் வித்தியாலயம் மற்றும் பெருந்தெரு விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும் விஷேட கல்விப்பிரிவில் கற்கும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை குறித்த பாடசாலைகளில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வானது விஷேட அலகில் கல்வி கற்கும் மாணவர்களின் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கும் அவர்களை நல்ல முறையில் வழிகாட்டுவதற்கும் சமுதாயத்தில் நல்லதொரு நிலைமையை அடைவதற்கும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிகழ்வில் சமூக சேவைகள் திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர் த.பிரணவன், சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கௌரிசாந்தன், மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் விஷேட அலகில் கல்வி கற்கும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்