வலையில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

சிறுத்தை வலையில் சிக்கி உயிரிழப்பு

சுமார் 5 வயதுடைய ஐந்தரை அடி நீளமுள்ள சிறுத்தையொன்று புலத்கொஹுபிட்டிய – இஹல உடுவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றில் வலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக  புலத்கொஹுபிட்டிய வனவிலங்கு அலுவலகம் தெரிவித்துள்ளது.

கேகாலை நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

பொலிஸாரும், வனவிலங்கு அதிகாரிகளும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்