பதுளை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்-

வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையின் போது பதுளை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்