மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு
மாத்திரை உட்கொண்ட மாணவி உயிரிழப்பு
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை இரவு குறித்த மாணவி சுகயீனமுற்றிருந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் மலலசேகர விடுதியில் குறித்த மாணவி இருந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
குருணாகல் பகுதியைச் சேர்ந்த வினோதி டி சில்வா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், அவர் சில காலமாக மன அழுத்தத்தினால் சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்