கோப்ரா கோல்ட் பயிற்சியில் பார்வையாளராக இலங்கை

கோப்ரா கோல்ட் பயிற்சியில் பார்வையாளராக இலங்கை

இலங்கை பார்வையாளர் நாடாக கோப்ரா கோல்ட் என்ற வருடாந்த இராணுவப் பயிற்சியில் பங்கேற்றுள்ளது.இது அமெரிக்காவும், தாய்லாந்தும் இணைந்து ஆரம்பித்துள்ள இராணுவப் பயிற்சி ஆகும்.

இந்தப் பயிற்சி இரண்டு வாரங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் ஜப்பான், சிங்கப்பூர், தென்கொரியா,  இந்தோனேசியா,  மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.

3800 இற்கும் அதிகமான அமெரிக்க மற்றும் 3000 தாய்லாந்து துருப்பினர்கள் இந்தப் பயிற்சிகளில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, ஜேர்மனி, பாகிஸ்தான், குவைட், சுவீடன், உள்ளிட்ட நாடுகள் பார்வையாளர் நாடுகளாக இந்தப் பயிற்சியில் பங்கேற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்