தொழிற்சங்க போராட்டத்திற்கு மலையகத்திலும் ஆதரவு

நாட்டில் வரிக்கொள்கை, மின்சார கட்டணம் அதிகரிப்பு, வங்கி வட்டி அதிகரிப்பு அத்தியவசிய பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு பல தொழிற்சங்கங்கள் ஒரு நாள் அடையாள தொழிற்சங்க போராட்டத்தினை ஆரம்பித்துள்ளன.

இந்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று  புதன்கிழமை மலையகத்தில் உள்ள பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கறுப்பு பட்டி அணிந்து போராட்டத்திற்கு ஆதவு தெரிவித்ததுடன் எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் ஆசிரியர்கள் தனது சம்பள உயர்வுக்காகவும் சம்பள முரண்பாட்டிற்காகவும் போராடும் போது ஒரு சில தொழிற்சங்கங்கள் அதற்கு எதிராக கருத்து தெரிவித்த போதிலும், ஆசிரியர் அதிபர்களில் பெரும்பாலானவவர்கள் இந்த வரிக்கொள்கைக்கு உள்வாங்கப்படாத போதிலும் தாங்கள் ஒற்றுமை கருதி இதற்கு ஆதவு தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

இதேநேரம் தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்த போதிலும் ஹட்டன் டிக்கோயா உள்ளிட்ட பல நகரங்களில் தபால் காரியாலயங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்ததுடன் தபால் விநியோக நடவடிக்கைகளும் வழமைபோல் இடம்பெற்றன.

இதேநேரம் ஹட்டன் உள்ளிட்ட பல பிரதேசங்களில் தனியார் மற்றும் அரச வங்கிகள் மூடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்