திறந்த கல்வி

திறந்த கல்வி

திறந்தகல்வி என்பது கல்வி பெறும் உரிமையை இழந்தவர்களுக்கு கற்க வழி செய்தலோடு கற்பதற்கு ஏற்பட்ட தடைகளை நீக்கி கற்க உதவுதலாகும். அதாவது உயர் கல்வியை முறைசாராக் கல்வியின் மூலம் அளிப்பதற்கு உருவாக்கப்பட்டதே திறந்த கல்வி முறையாகும்.

திறந்த கல்வியின் முக்கியங்களாவன:

 பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து பல்கலைக்கழகங்களில் கற்க வாய்ப்பினைப் பெறமுடியாதவர்களுக்கு              உயர் கல்வியைப் பெறுவதற்கு வாய்ப்பாக  உள்ளது.

 திறந்த கல்வியினூடாக எல்லா வகைக் கற்றலை மேற்கொண்டவரும் இதில் கற்கமுடியும்.

 அனுமதியில் எந்த வயதினரும் எந்த திறனை, தகைமையினை உடையவரும் கற்கலாம். திறந்த கல்வியின் அடிப்படைப் பண்புகளாவன:

 தொடர்ச்சியாக பாடசாலைக் கற்கை நெறியைப் பகுப்பாய்வு செய்வதோடு எதிர்பார்த்த நோக்கத்தை                                       தொடர்ச்சியாக மதிப்பீடு செய்வதாகவும் உள்ளது.

 நெகிழ்ச்சித் தன்மை அதிகமாகக் காணப்படுகின்றது. அதாவது வயது, கல்வித்தகைமை என்பன உயர் கல்வியினை            பெறுவதற்கு வரையறை

 கட்டுப்பாடுகளும் இல்லை. ஏனெனின் விரிவுரைகளுக்கு வருகை தர வேண்டும், முழு நேரமும் கற்றலில்                                       ஈடுபடவேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை.

 கற்றலுக்கான சாதனங்கள் குறைவாகக் காணப்படுகின்றது.

 தொழிலை மேற்கொண்டே கல்வியினை நூல்கள் சாதனங்களினூடாக பெறமுடியும்.
திறந்தகல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு தடைகள் காணப்படுகின்றன. அவையாவன:

 வறுமையின் காரணமாக நடுத்தர வர்க்கத்தினை சேர்ந்தவர்கள் தங்களுக்கு தேவையான நவீன தொழிநுட்ப                           செவிப்புல, கட்புல சாதனங்களை பெறுவது கடினமாக உள்ளது.

 தொழிலை மேற்கொண்டு  அதனோடு கற்றலை மேற்கொள்வதும் கடினமாக உள்ளது. ஏனெனில் தொழில்,                                    வீட்டுவேலை என்பவற்றை மேற்கொண்டு கற்றலிலும் ஈடுபடுவதற்கு நேரம் போதாமை காணப்படுகின்றது.

இன்றைய காலகட்டத்தில் கல்வியைப் பெறுவதன் ஊடாகவே சமூகத்தில் வாழமுடியும் என்ற நிலை காணப்படுகின்றது.

எனவே திறந்தகல்வி உயர் கல்வியைப் பெறமுடியாதவர்கள் பெற்றுக் கொள்ளவும் உயர் கல்வியைப் பெற்றவர்கள் மேலும் தங்களுடைய தகைமைகளை அதிகரித்துக் கொள்ளவும் உதவுவதாகக் காணப்படுகின்றது எனலாம்.

இவ் விடயங்களை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

சில மாணவர்கள் பாடசாலைக்கல்வியை நிறைவு செய்ததும்   அதன் பின் என்ன செய்வது என்று அறியாமல் கல்வியை நிறைவு செய்து கொண்டு வாழ்க்கையை தொலைக்கின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்