
எல்லை மீறினாலும் இந்திய மீனவர்களை தாக்க உரிமையில்லை
இந்திய மீனவர்களை எல்லை மீறினாலும் தாக்க உரிமையில்லை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் அண்மையில் கோடிக்கரை அருகே தாக்கினர்.அத்துடன் மேலும் ஒரு தாக்குலும் இந்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த தாக்குதல் இரண்டும் இந்திய கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்திய கடல்சார் எல்லையை கடந்தாலும் இலங்கை கடற்படைக்கு அவர்களைத் தாக்க எந்த உரிமையும் இல்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதேசத்திற்குள் இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டமையினால், இலங்கை கடற்படையின் ஆணவத்தின் முன்னால், இந்தியா வெறும் பார்வையாளராக செயற்படக்கூடாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தாக்குதல் நடத்தும் இலங்கையின் கடற்படையினர் கைது செய்யப்படவேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
