தனியார் பேருந்து மீது கெப் ரக வண்டி மோதி விபத்து

தனியார் பேருந்து மீது கெப் ரக வண்டி மோதி கோர விபத்து

அனுராதபுரத்திலிருந்து களுத்துறை நோக்கிச் செல்லும் தனியார் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்த போது, அதன் பின்னால் அதிவேகமாக வந்த கெப் ரக வண்டி ஒன்று பேருந்து மீது மோதி கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

​​பேருந்தின் பின்பகுதியில் பயணிகள் தங்களது பயணப் பொதிகளை ஏற்றிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக வந்த கெப் ரக வண்டி, பேருந்தின் பின் பகுதியில் மோதிய நிலையில் அங்கு பொதிகளை ஏற்றிக் கொண்டிருந்த மூன்று பயணிகள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

விபத்தில் படுகாயமடைந்த பயணி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன்,  காயமடைந்த ஏனைய இருவரும் தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்