
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 22 வயது இளைஞன் கொலை
அம்பலாங்கொட, இடம்தொட்ட பிரதேசத்தில் 22 வயதுடைய இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகில் வைத்து குறித்த இளைஞன் சிலரால் தாக்கப்பட்டு பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொட பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
