
எரிபொருள் QR முறை தொடர்பில் பரவி வரும் வதந்தியை மறுத்துள்ள எரிசக்தி அமைச்சர்
தேசிய எரிபொருள் பாஸ் QR அமைப்பு இடைநிறுத்தப்பட்டமை தொடர்பில் பரவி வரும் செய்திகளை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.
முன்னதாக, ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் QR குறியீடு எரிபொருள் விநியோக முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) வட்டாரங்களை மேற்கோள்காட்டி தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எவ்வாறாயினும், இந்த அறிக்கையை மறுத்துள்ள அமைச்சர் காஞ்சன விஜேசேகர, ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் தேசிய எரிபொருள் பாஸ் QR முறையை இடைநிறுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
