படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளார்

நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளார்

கதிகொட, மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான ஒருவர் கலேவெல,  தேவஹுவ நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

உல்லாசப் பயணத்தில் கலந்து கொண்ட இவர் நீர்த்தேக்கத்தில் குளிப்பதற்குச் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் படகில் ஏறியுள்ளார்.நீர்த்தேக்கத்தின் நடுப்பகுதிக்கு சென்ற போது படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படகில் பயணித்த மீனவரும் மற்றுமொரு நபரும் நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன நபரை தேடுவதற்காக தம்புள்ளை பொலிஸ்நிலைய உயிர்காப்பு படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பயன்படுத்தவும்