மட்டக்களப்பு கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் 144 ஆவது ஆண்டு விழா

மட்/ககு/ கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தின் 144 ஆவது வித்தியாலயதினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.

பாடசாலையின் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் ஊடாக பாடசாலையின் அபிவிருத்தியை ஏற்படுத்துவது’கல்விதனைக் கொண்டு கருத்தொருமித்து தாய்மண்ணை காத்து வாழ்வில் எழுச்சி பொறுவோம்’ என்னும் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு 144 வது பாடசாலை தினம் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பழைய மாணவர்கள், பாடசாலை நிர்வாகம் என்பனவற்றினால் ஒருங்கிணைகப்பட்டு பாழைய மாணவர்களை மையப்படுத்தியதாக விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றது.

ஆண்களுக்கான கிறிக்கட் சுற்றுப் போட்டி மற்றும் பெண்களுக்கான எல்லே சுற்றுப் போட்டிகளும் நடைபெற்றன..

நிகழ்வானது பாடசாலை அதிபர் ந.சுரேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலையின் முன்னாள் அதிபர்கள் பாடசாலையின் ஆசிரியர்கள், கிராம உத்தியோகஸ்தர் ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு பாடசாலை கொடி அசைக்கப்பட்டு நடைபவணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் நடைபவணியில் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர் சமூகம் வெவ்வேறு விதமான மேலாடைகளை அணிந்து கல்லூரியின் சின்னம் பொறிக்கப்பட்ட பதாதைகள் மற்றும் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக நடந்து சென்றனர்.

அத்துடன் நடைபவனியில் பிரதேசத்தின் கலாச்சாரம் சார்ந்த விடயங்கள் விளையாட்டு அணியினர், சாரண இயக்க அணியினர், சுற்றாடல் முன்னோடிக் கழகம் படையினர்இமாணவர் தலைவர்கள், போதை பொருள் ஒழிப்பதற்கான ஊர்த்தி அணியினர், நஞ்சற்ற உணவிற்காக வீட்டுத் தோட்டம் செய்வோம் என்ற விழிப்புணர்வு ஊர்தி மகாகவி பாரதியார் விபுலானந்தர், திருவள்ளுவர் ஆகியேரின் உருவப் படம் தாங்கிய ஊர்தி என பாடசாலையின் திறமைகளை வெளிப்படுத்தும் விடயங்கள் இவ் நடை பவனியில் அமைந்திருந்தது.

கிண்ணையடி ஆரம்ப பாடசாலையில் இருந்து ஆரம்பமான இவ் நடைபவணியானது சுங்காங்கேனி கறுவாக்கேனி வீதி வழியாக சென்று மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி வழியாக வந்து கிண்ணையடி வீதி ஊடாக பாடசாலையை மைதானத்தை சென்றடைந்தது.

மைதானத்தில் நிகழ்வுகள் பல இடம்பெற்றது தலைமையுரை வரவேற்பு நடனம் பல கலை நிகழ்வுகள் இடம்பெற்று அதிகள் உரைகளும் இடம்பெற்றது .