கடலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை- மூதூர் பகுதியில் கடலுக்குச் சென்ற மீனவரொருவர் காணாமல் போயுள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 24 ஆம் திகதி அதிகாலை நான்கு மணியளவில் வீட்டில் இருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில் கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், குறித்த நபரின் சடலம் கடலில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான மூதூர் -பஹ்ரியா நகரைச் சேர்ந்த அருளானந்தம் முகமட் யூசுப் (35வயது) எனவும் தெரிய வருகின்றது.

மரணம் தொடர்பிலான விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.